நீட் தேர்வுக்கு மார்ச் 27 முதல் ஹால்டிக்கெட்

  • நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக் கான நீட் தேர்வு வரும் மே 3-ம் தேதி நடைபெறுகிறது. 
  • தமிழகத் தில் 1,17,502 பேர் உட்பட நாடு முழுவதும் 15,93,452 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 
  • தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் என நாடுமுழுவதும் 154 நகரங் களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 
  • இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மார்ச் 27-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 
  • நீட் தேர்வு மே 3-ம் தேதியும், தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment