பொறியியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளின் நிலை குறித்து இன்று (பிப்.24) முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக அண்ணா பல்கலை. அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழகத்தின்கீழ் 557 பொறியி யல் கல்லூரிகள் இயங்குகின்றன. 
  • இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்கள் இணைப்பு அந்தஸ்தை அண்ணா பல்கலை. மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னரே பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும். அந்தவகையில் வரும் கல்வியாண்டுக்கான இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க கல்லூரிகள் பிப்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை. அறிவித் திருந்தது. 
  • தற்போது காலஅவகாசம் முடிந்துவிட்ட நிலையில், வரும் கல்வியாண்டு முதல் 20 கல்லூரி களில் மாணவர் சேர்க்கை நிறுத்தப் பட உள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. 
  • இதுகுறித்து அண்ணா பல் கலை. அதிகாரிகள் கூறியதாவது: பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து பெற மொத்தமுள்ள 557 கல்லூரிகளில் 537 மட்டுமே விண்ணப்பித்துள்ளன. 
  • பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் தொடர்ந்து சரிவதால் வரும் கல்வியாண்டில் 7 கல்லூரி கள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிடவும், 13 கல்லூரிகள் முழுமையாக மூடிக்கொள்ளவும் முன்வந்துள்ளன. 
  • மேலும், 2 கல்லூரி கள் மாணவர் சேர்க்கையை தொடருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. 
  • இதுதவிர சேர்க்கை இடங்களை பாதியாக குறைக்க 50 கல்லூரிகள் வரை விண்ணப்பித்துள்ளன. 
  • இதன் மூலம் வரும் கல்வியாண்டில் பொறியியல் கலந்தாய்வில் சுமார் 8 ஆயிரம் இடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது. இதையடுத்து விண்ணப்பித்த கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆய்வகம் போன்ற தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான ஆய்வுப் பணிகள் பிப்.24 (இன்று) முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. 
  • ஏஐசி டிஇ-யின் புதிய விதிகளின்படி நாக் அங்கீகாரம் பெற்ற கல் லூரிகளில் 1:15 எனவும் இதர கல்லூரிகளில் 1:20 எனவும் ஆசிரி யர் - மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். 
  • விதிகளை முறையாக பின்பற்றாத கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனு மதி வழங்கப்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment