குரூப் 2 , உதவி பொறியாளர் பணிக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு


  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: 
  • குரூப் 2 பதவியில் 23 துறைகளில் காலியாக இருந்த 1,338 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2018 நவ. 11-ல் நடந்தது. முதன்மை தேர்வு கடந்த ஆண்டு பிப். 23-ல் நடந்தது. 
  • அதில் தேர்ச்சியானவர்களில் 2,667 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். 
  • இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப் படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 
  • அதற் கான கலந்தாய்வு பிப்ரவரி 10 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்குரிய அழைப்பாணையை தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி (www.tnpsc.gov.in) இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
  • அதே போல், 733 பதவிக்கான உதவி பொறியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 1,491 பேருக்கு நேர்முகத்தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. 
  • இதில் தேர்வான பட்டதாரிகளுக்கு பிப். 6, 7, 8-ம் தேதிகளில் கலந்தாய்வு நடக்கும். இதற்கான அழைப்பாணையை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment