குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விவகாரம் அரசு ஊழியர் உட்பட 2 பேர் கைது போலீஸ்காரர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு.


  • குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலக ஊழியர், வட்டார போக்கு வரத்து அலுவலக பெண் ஊழியர் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். 
  • டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு முறைகேட் டில் ஈடுபட்டதாக அரசு அதிகாரி கள், இடைத்தரகர்கள், பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் என 16 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். 
  • மேலும் பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து டிஎன் பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில், சிபிசிஐடி அதிகாரி கள் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
  • அதனடிப் படையில், காரைக்குடி சார் பதி வாளர் அலுவலகத்தில் உதவியாள ராக பணிபுரிந்து வரும் வேல் முருகன், வில்லிபுத்தூர் சார் பதி வாளர் அலுவலகத்தில் உதவியாள ராக இருக்கும் ஜெயராணி ஆகி யோரை நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். 
  • தொடர்ந்து நடத்தப்பட்ட விசா ரணையின்பேரில் குரூப்-2ஏ முறை கேடு தொடர்பாக மேலும் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் சுதா ராணி, சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள உள்துறை அமைச் சக அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் விக்னேஷ் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். 
  • இவர்கள் இரு வரும் இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து பணியில் சேர்ந் திருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். 
  • டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு களில் ஈடுபட்ட இடைத்தரகர் ஜெயக் குமார் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரிடம் கார் ஓட்டு நராக இருந்த சம்பத் என்பவரின் மனைவிதான் சுதாராணி என்பது தெரியவந்துள்ளது. 
  • இவர், சென்னை கொரட்டூரில் வசிக்கிறார். குரூப்-4 மற்றம் குரூப்-2ஏ தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கில் சென்னை ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை போலீ ஸார் தேடி வருகின்றனர். 
  • அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர். கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல், பொய்யாக புனையப்பட்ட ஆவணங்களை உண்மை எனக் கூறி பயன்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment