1,500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்  பிப்.19-ல் நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  • தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அறிவித்துள்ளார். 
  • இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (பயிற்சி பிரிவு) சார்பில் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரன்டீஸ்) நேரடி சேர்க்கை முகாம் வரும் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கல்பட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 
  • இம்முகாமில், சென்னை மண்ட லத்துக்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தொழில் பழகுநர் பயிற்சிக்கு 1,500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளன. 
  •  என்.சி.வி.டி. மற்றும் எஸ்.சி.வி.டி. முறையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, இறுதி ஆண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் பயிற்சியாளர்கள், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் கூடுதல் கல்வி தகுதியுடைய மாணவர்களும் நேரடியாக தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து 3 முதல் 6 மாதங்கள் வரை அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற் பழகுநர் பயிற்சியும் பெற்று தேசிய அசல் தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம். 
  • இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. இந்த தொழிற் பழகுநர் சான்றி தழ் பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு கூடுதல் சலுகையும் கிடைக்கும். 
  • எனவே, முகாமில் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment