கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு ரூ.15 லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர் சிக்கினார்.

  • ரூ.15 லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் சிக்கினார். 
  • இதன்மூலம் 2016-ம் ஆண்டு நடந்த குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது 
  • வெளிச்சத்துக்கு வந்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் கோர்ட்டில் சரண் அடைந்தார். 
  • இதனைத்தொடர்ந்து இந்த முறைகேடுகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 
  • இந்த முறைகேடுகளுக்கு இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அதிகாரியான நாராயணன் என்ற சக்தி என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். 
  • ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி சக்தி மூலமாகத்தான் ஜெயக்குமாரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். 
  • போலீஸ்காரர் சித்தாண்டி ரூ.2 கோடி வரை பணம் கொடுத்து 22 பேரை முறைகேடாக அரசு வேலையில் சேர்த்துள்ளார். 
  • கைதான இன்னொரு போலீஸ்காரர் பூபதியும் ரூ.55 லட்சம் கொடுத்து 5 பேரை அரசு வேலையில் சேர்த்துள்ளார். 
  • கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற சக்தி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. 
  • அவரிடம் நடத்திய விசாரணையில் 2016-ம் ஆண்டு குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. 
  • அந்த தேர்வில் கலந்துகொண்ட கிராம நிர்வாக அதிகாரி சக்தி ரூ.15 லட்சத்தை இடைத்தரகர் ஜெயக்குமார் மூலம் கொடுத்து வேலையில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. 
  • நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள ஜெயக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். 
  • அப்போது மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் ஆகியோர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment