பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்முறையாக புதிய பாடத் திட்டத்தின்கீழ் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாண வர்களுக்கான ஹால்டிக்கெட் நேற்று முன்தினம் இரவு வெளி யிடப்பட்டது. மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் ஹால்டிக் கெட்கள் வழங்கப்படும். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சலில் ஹால்டிக்கெட்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரம் தனித்தேர்வர்கள் நேரடி யாக தேர்வுத்துறை இணைய தளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து தங்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வெழுத உள்ள மாணவர் களின் பெயர்ப் பட்டியலில் ஏதே னும் பிழைகள் இருப்பின் அதை சரிசெய்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனே அனுப்பி வைக்க வேண்டும் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment