நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் வேதனை.


  • தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படா ததால் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப் படும் சூழல் உருவாகியுள்ளது.
  • தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக் கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 
  • மாநிலம் முழுவதும் 412 மையங்களில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த பயிற்சியை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.இதுவரை சுமார் 42 ஆயிரம் பேர் இங்கு பயிற்சி பெற்றபோதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 11 பேருக்குத்தான் இடம் கிடைத்தது. 
  • இதனால் அரசு பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
  • இதையடுத்து நடப்பு ஆண்டு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. 
  • அரசு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
  • அவ்வாறு தேர்வான 19,000 பேருக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. 
  • வாரம்தோறும் மாதிரி குறுந்தேர்வு களும் நடத்தப்பட்டன. இந்நிலை யில் உள்ளாட்சித் தேர்தல், தொடர் விடுமுறை உள்ளிட்ட காரணங் களால் நீட் பயிற்சி வகுப்புகள் டிசம்பருக்குப்பின் முறையாக நடத்தப்படவில்லை. 
  • தற்போது தேர்வுக்கு குறைந்த காலஅவகா சமே இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள் ளது.
  • இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:நடப்பு ஆண்டு மிகவும் காலதாம தமாக, செப்டம்பர் 24-ம் தேதிதான் அரசின் பயிற்சி வகுப்பு கள் தொடங்கின. 
  • இதுவரை 35 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடை பெற்றுள்ளன. 
  • குறுந்தேர்வுகள் நடத்தப்பட்ட தினங்களைச் சேர்த் தாலும் ஒட்டுமொத்தமாக 51 நாட் களே நீட் தேர்வுக்கு, அரசு சார்பில் பயிற்சி தரப்பட்டுள்ளது. 
  • தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1 முதலே நீட் தேர்வுக்கு தீவிரமாக பயிற்சி பெறுகின்றனர்.குறைந்தபட்சம் ஓராண்டாவது முழுமையான பயிற்சி பெற்ற பின் னரே அவர்கள் நீட் தேர்வை எழுது கின்றனர். 
  • ஆனால், பொருளாதாரத் தில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களால் தங்களை நீட் தேர் வுக்கு தயார்படுத்திக் கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.
  • இதை உணர்ந்துதான் தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி தர முடிவானது. ஆனால், ஓராண்டுகூட பயிற்சியை முறையாக அரசு வழங்கியதில்லை. 
  • அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகபட்சம் 2 மாதம்தான் பயிற்சி பெறுகின்றனர்.
  • அவையும் கண்துடைப்பாகவே இருப்பதால் மாணவர்களால் போட்டித் தேர்வுகளுக்கு முழுமை யாக தயாராக முடிவதில்லை. 
  • அமெரிக்காவில் இருந்து நிபுணர் களை அழைத்துவந்து பயிற்சி அளிக்கப் போவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார். 
  • ஆனால், பல பகுதிகளில் பயிற்சிகூட முறையாக நடைபெறுதில்லை. இந் நிலை நீடித்தால் மருத்துவ படிப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
  • இதுதொடர்பாக பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கூறும்போது, ‘‘வகுப்பறையில் பாடம் நடத்து வதைப் போலவே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 
  • நீட் தேர்வில் எவ்விதமான கேள்விகள் கேட்கப் படும், நேர மேலாண்மையை எவ் வாறு கையாள்வது என்பன போன்ற உத்திகள் கற்றுதரப்படுவதில்லை.
  • நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன் னும் 3 மாதமே அவகாசம் உள்ளது. 
  • இதில் ஜனவரி இறுதியில் செய் முறைத் தேர்வுகள் தொடங்கிவி டும். 
  • அதன்பின் மார்ச் வரை பொதுத் தேர்வு நடைபெறுவதால் பயிற்சி வகுப்புகள் நடைபெறாது.
  • பொதுத்தேர்வுக்கு தயாராகவே முக்கியத்துவம் தந்தாக வேண்டும். ஏப்ரல் மாதம் மட்டும் படித்து நீட் தேர்வுக்கு தயாராக முடியுமா என்றால் அது சிரமமான காரியம். 
  • எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப் பித்த பலர் தற்போது தங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ளும் நிலையை உள்ளது’’ என்றனர்.

No comments:

Post a Comment