பிஎச்.டி பட்டங்களை சமர்ப்பிக்க அண்ணா பல்கலை. உத்தரவு


  • தனியார் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றுள்ள பிஎச்.டி. பட்டம் தொடர்பான ஆவணங்களை மார்ச் 16-ம் தேதிக்குள் சமர்ப் பிக்க அண்ணா பல்கலை. உத்தர விட்டுள்ளது. 
  • இதுதொடர்பாக அனைத்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கும் அண்ணா பல் கலைக்கழகம் சார்பில் அனுப்பப் பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தனியார் கல்லூரி களில் பணிபுரியும் சில பேராசிரி யர்கள் போலி பிஎச்.டி. சான்றி தழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந் துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. 
  • இதுதவிர, கணிசமான வர்கள் தவறான ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை அளித் தும் பேராசிரியர், விரிவுரையா ளர் பணியில் சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 
  • எனவே, தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர், பேராசிரியர் தேர்வின்போது பட்டதாரிகளின் சான்றிதழ் விவரங்களை முழுவ துமாக பரிசோதித்த பிறகே பணியில் சேர்க்க வேண்டும். 
  • தங்கள் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றுள்ள பிஎச்.டி. பட்டம் உண்மையானதுதான் என்பதற் கான சான்றிதழை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து பெற்று, அண்ணா பல்கலை.யில் மார்ச் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment