சிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

ஆடிட்டர் பணிக்கான சிஏ தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

இந்திய கணக்கு தணிக்கை யாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் ஆடிட்டர் பணிக்கான கணக்கு தணிக்கையாளர் (சிஏ) தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்ற இறுதித்தேர்வின் முடிவு கள் நேற்று முன்தினம் வெளி யாயின. அதன்படி பழைய பாடத்திட்டத்தில் 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதில் 10.2 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதில் 15.12 சதவீதம் பேர் வரை தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்வு முடிவு கள் மின்னஞ்சல் மற்றும் செல்போன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://icai.nic.in/caresult/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment