அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு


  • அண்ணா பல்கலை.யின் முதல் பருவத் தேர்வில் பைத்தான் பாடப்பிரிவில் 52 சதவீத மாணவர் கள் தோல்வி அடைந்துள்ளனர். 
  • தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 
  • இந்த கல்லூரிகளுக்கான தேர்வுகள் பல்கலை. சார்பில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. 
  • அதன்படி முதலாம் ஆண்டு மாண வர்களுக்கான முதல் பருவத் தேர்வுகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 
  • அதில் பைத் தான் என்ற கணினி மென்பொருள் தொடர்பான பாடப்பிரிவில் 52 சதவீதம் பேர் தோல்வி அடைந் துள்ளனர். மொத்தம் 64,810 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலை யில், 31,044 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 
  • இது பல்கலைக் கழக பேராசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
  • பைத்தான் பாடப்பிரிவில் செயற்கை நுண்ணறிவு குறித்த மென்பொருள் கோடிங் விவரங்கள் அதிக அளவு இடம்பெறுகின்றன. 
  • இந்த பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது. மாணவர்களும் புரிந்துகொண்டு படிக்க சிரமப்படுகின்றனர். 
  • அதனால் துறை வல்லுநர்கள் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பைத்தான் கோடிங் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment