அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பணி பொதுத் தேர்வில் தேர்ச்சி வீதத்தை அதிகரிக்க முயற்சி

ஆரணி அருகே நெசல் கிராமத் தில் உள்ள அரசுப் பள்ளியில் அரை யாண்டுத் தேர்வில் முதல் மதிப் பெண் எடுத்த மாணவி மதுமிதா, ஒருநாள் தலைமை ஆசிரியர் பணியை மேற்கொண்டார். பள்ளி மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர் எடுத்த இந்த முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நெசல் கிராமம் விவசாயம், நெசவுத் தொழிலை பின்னணியாக கொண்ட மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங் குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 154 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசுப் பொதுத்தேர்வில் 60 முதல் 65 சதவீதம் அளவே தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 7 ஆசிரியர்கள் என மொத்தம் 8 பேர் பணியாற்றுகின்றனர். தலைமை ஆசிரியராக வெங்கடேசன் என்ப வர் பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர் ஒரு புதுமையான முயற் சியை மேற்கொண்டார். இதற்காக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ‘‘பள்ளியளவில் அரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் எடுப் பவர் ஒருநாள் தலைமை ஆசிரியர் பணியை மேற்கொள்ளலாம்’’ என அறிவித்தார். தலைமை ஆசிரியரின் இந்த முயற்சிக்கு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பள்ளியளவில் மதுமிதா என்ற மாணவி 447 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பள்ளியில் நேற்று காலை நடந்த இறைவழிபாடு கூட்டத்தின்போது மதுமிதா ஒருநாள் தலைமை ஆசிரியராக செயல்படுவார் என தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து பேசிய மாணவி மதுமிதா, ‘‘இந்த கிராமத்தின் அரசுப் பள்ளியில் படிக்கும் நாம் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்று நம் கிராமத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்த மாணவி மதுமிதா, பள்ளி ஆசிரியர்களின் வருகைப் பதி வேட்டை பார்வையிட்டதுடன் வகுப் புகள் முறையாக நடக்கிறதா? என் றும் நேரில் சென்று பார்வையிட் டார். மேலும், பள்ளியில் செய்ய வேண்டிய பணிகள் ஏதாவது இருந்தால், அதை சுற்றறிக்கையாக எழுதி கையெழுத்திட்டு வழங் கினால், அதை ஒரு வாரத்தில் சரி செய்வதாக தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். அரசுப் பொதுத் தேர்வில், மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்தவே, இதுபோன்ற முயற்சியை மேற் கொண்டேன். இதற்கு, ஆசிரியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்’’ என்றார்.

மாணவி மதுமிதா கூறும்போது, ‘‘எனது பெற்றோர் நெசவுத் தொழில் செய்கின்றனர். எங்கள் வீட்டில் 3 பெண் பிள்ளைகள். நான் 2-வது மகள். காலாண்டுத் தேர்வில் 380 மதிப்பெண் எடுத்தேன். ஒருநாள் தலைமை ஆசிரியர் பணியை பார்க்க கூடுதல் நேரம் படிக்க ஆரம்பித்தேன். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்தபோது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமை யாகவும் இருந்தது. எனது பள்ளி யைப் பொருத்தவரை எந்த குறை யும் இல்லை என்றே கூறுவேன்’’ என்றார்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்காக மாணவர்களை ஊக்கப்படுத்தும் நெசல் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment