டான்செட் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


  • டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்பிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ் நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். 
  • அதன்படி, 2020-ம் ஆண்டுக் கான டான்செட் தேர்வு எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன. 
  • இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 7-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடை தாக அறிவிக்கப்பட்டது. 
  • இந்நிலையில், பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவ காசம் பிப்.4-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித் துள்ளது. 
  • விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 
  • தேர்வுக் கட்டணம் ரூ.600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர் கள் கட்டணமாக ரூ.300 செலுத் தினால் போதுமானது. 
  • தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் களும் இத்தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம். 
  • இதர விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment