வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி வழக்கு தள்ளுபடி நீட் தேர்வில் யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்

நீட் தேர்வில் இருந்து சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் உட்பட யாருக்கும் விலக்கு அளிக்க முடி யாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து சிறு பான்மை மருத்துவக் கல்லூரியான தங்களுக்கு விலக்கு அளிக்க வேண் டும் எனக் கோரி வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி கள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘நீட் தேர் வுக்கு விலக்கு கோரியது தொடர் பாக சிஎம்சி மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கு ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டதே, தற் போது அதில் மீண்டும் புதிதாக என்ன இருக்கிறது” என கேள்வி எழுப்பினர்.

சிஎம்சி தரப்பில், ‘‘நீட் தேர்வை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத் திருத்த உத்தரவை எதிர்த்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நீட் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்பதால் அது தொடர்பாக வாதிடுகிறோம்’’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘ஏற் கெனவே மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்பது தொடர் பாக உச்ச நீதிமன்றம் விரிவாக உத்தரவிட்டுள்ளது. அதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இந்த விஷயம் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட ஒன்று. நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கும்போது அதில் சிறு பான்மைக் கல்லூரி என்பதற்காக மட்டும் விலக்கு அளிக்க முடியுமா? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருக்காக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மாற்றியமைத்துக் கொண்டு இருக்க முடியாது. நீட் தேர்வை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமே (எய்ம்ஸ்) பின்பற்றும்போது நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? இதில் நாங்கள் திட்டவட்டமாக இருக் கிறோம். இந்த விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை’’ என்று தெரிவித்தனர்.

அதையடுத்து சிஎம்சி கல்லூரி தரப்பில், அந்த மனுவை வாபஸ் பெற அனுமதியளிக்க வேண் டும் என கோரிக்கை விடுக்கப் பட்டது.

அதற்கு முதலில் அனுமதி மறுத்த நீதிபதிகள், பின்னர் வாபஸ் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment