மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு


  • மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. 
  • இதில் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக அளவிலான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். 
  • இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப்பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங் கள் உள்ளன. 
  • தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத் தும் 2020-21-ம் கல்வி ஆண்டு மாண வர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு www.natboard.edu.in என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப் பது கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது. 
  • நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் முடித்து விட்டு பணியாற்றி வரும் 1,67,102 பேர் விண்ணப்பித்தனர். 
  • கடந்த 5-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடுமுழுவதும் 162 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. நாடுமுழுவதும் 1,60,888 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் இருந்து 18,854 பேர் தேர்வில் பங்கேற்றனர். 
  • தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ல் வெளியிடப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரு நாள் முன்னதாக 30-ம் தேதி முடிவுகள் இணையதளத்தில் வெளி யிடப்பட்டன. 
  • நீட் தேர்வில் 89,549 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தமிழகத் தில் 11,681 பேரும் கர்நாடகாவில் 9,792 பேரும் மகாராஷ்டிராவில் 8,832 பேரும் தகுதி பெற்றுள்ளனர். 
  • இதன்படி, 1,200 மதிபெண்களுக்கு நடைபெற்ற நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினருக்கு (பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்) 366 மதிப் பெண்ணும் ஒபிசி மற்றும் எஸ்சி, எஸ்சி,பிரிவினர்களுக்கு 319 மதிப் பெண்ணும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 342 மதிப் பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment