தோல்விகளில் இருந்து மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

திறமையை மேம்படுத்திக் கொள்ளும்போது சில தோல்வி கள் வருவது இயற்கைதான். தோல்விகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்று மாண வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

டெல்லி தல்கோட்ரா விளை யாட்டு மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களு டன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார். விழாவில் மாநிலங்களில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண் டனர். அவர்களில் 1,050 பேர் கட்டுரை போட்டி நடத்தி நிகழ்ச் சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடையே பிரதமர் மோடி உற்சாகம் அளிக்கும் வகையில் பேசினார். அவர் பேசியதாவது:

மக்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யும் முன்பு குஜராத் மாநில முதல் வராக இருந்தேன்.

இந்த பதவிகள் மூலம் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி உள் ளேன். அதன் மூலம் எனக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்தன. இந்த நிகழ்ச்சி களில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என்று கேட் டால் மாணவர்களுடன் கலந் துரையாடும் (பரிட்சா பே சர்ச்சா) இந்த நிகழ்ச்சிதான் என்று சொல்வேன்.

கல்வியில் நல்ல மதிப்பெண் கள் எடுக்க வேண்டும் என்ற லட்சியம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் நல்ல மதிப்பெண் பெற்றால் அத்துடன் பணி முடிந்து விடுவது இல்லை.

திறமையை மேம்படுத்திக் கொள்ளும்போது சில தோல்வி கள் வருவது இயற்கை தான். தோல்விகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வ தற்காக நம்முடைய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பி வைத்தனர். அதை நிலவில் தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நாளில், ஹரி கோட்டாவில்தான் இருந் தேன். என்னை சிலர் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். என்றாலும் விஞ்ஞானிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகை யில் சென்றேன். அந்த திட் டம் தோல்வி அடைந்ததாக என்னிடம் தெரிவித்தனர். இருந்தபோதும் கவலைப்படா தீர்கள் என்று விஞ்ஞானிகளை தட்டிக் கொடுத்து விட்டு வந்தேன்.

நீங்கள் ஒவ்வொரு வரும் 2047-ல் இந்தியாவின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு முக்கிய பங்கு தருபவர்களாக இருப்பீர்கள். நாம் அப் போது சுதந்திரத்தின் 100-வது ஆண்டை கொண்டாடுவோம். எனவே, நாட்டின் ஒருங் கிணைந்த மேம்பாட்டுக்கு ஒவ் வொரு இளைஞரும் தங்களது பங்களிப்பை தர வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

No comments:

Post a Comment