திறந்தநிலை பல்கலை. பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (ஜன. 4) கடைசி நாளாகும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் யுஜிசி மற்றும் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்டி படிப்புகள் வழங்கப்படுகின்றன. பொருளாதாரம், விலங் கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், தமிழ் உட்பட தலைப்புகளின்கீழ் பிஎச்டி படிப்பை மேற்கொள்ளலாம். இதில் யுஜிசி இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவர்களும் சேரலாம்.

மேலும், முழுநேர பிஎச்டி மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த டிசம் பரில் தொடங்கியது. இதையடுத்து விண்ணப் பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் (ஜன.4) முடிவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் w‌w‌w.‌t‌n‌o‌u. a c.‌i‌n என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment