மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சி தமிழக பள்ளிகளில் நேரலையாக ஒளிபரப்பு

பிரதமர் நரேந்திர மோடி, மாணவர் களுடன் இன்று கலந்துரையாடும் நிகழ்ச்சியை நேரலையாக காண ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு பயம், மனஅழுத்தம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுடெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உட்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி யூ-டியூப் சேனல், முகநூல், தூர்தர்ஷன், வானொலி போன்ற மத்திய அரசின் ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்படவுள்ளது. இதைக் காண நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேவையான ஏற் பாடுகளை மேற்கொள்ள வேண் டும். மேலும், நிகழ்ச்சியை கண்டு களித்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் கருத்துகளை உள்ளடக்கிய அறிக்கையை புகைப் படங்களுடன் தயாரித்து தலைமை ஆசிரியர்கள், இயக்குந ரகத்துக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment