மக்களின் நுகர்வு திறனை அதிகரிக்க பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பு


 • பிப்ரவரி 1-ம் தேதி, வரும் நிதி ஆண்டுக்கான (2020-21) பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ளது. இந்தப் பட் ஜெட்டில் மத்திய அரசு, உள் கட்டமைப்பு சார்ந்த செலவினங் களை உயர்த்தும் என்றும், மக் களின் நுகர்வு திறனை அதிகரிக் கும் வகையில் தனிநபர் வருமான வரியை குறைக்கும் என்றும் அரசு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 • மத்திய அரசு கடும் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண் டுள்ளது. இந்நிலையில் வரும் பட்ஜெட்டில் வருமானவரியை குறைத்தால் மத்திய அரசின் நிதி நிலை மிகக் கடுமையாக பாதிக்கப் படும். எனவே பெரிய அளவில் வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பில்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். 
 • இந்நிலையில், மக்களின் நுகர்வு திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. எனவே வரு மானவரியை குறைக்கும் முடிவை அரசு எடுக்கும் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா கடும் பொருளா தார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 
 • மக்களின் நுகர்வு, முதலீடு ஆகியவை பெருமளவில் சரிந்துள் ளன. பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக மத்திய அரசு கடந்த ஆண்டு நிறுவன வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது. 
 • இதனால் அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
 • மக்களின் நுகர்வு திறன் கடுமையாக சரிந்துள் ளது. மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்காமல், வேறெந்த நட வடிக்கைகளை மேற்கொண்டாலும் பொருளாதாரம் மீளாது என்று கூறப் பட்டது. 
 • அதன் நீட்சியாகவே மத்திய அரசு வருமான வரி குறைப்பை மேற்கொள்ளும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 
 • உள்கட்டமைப்பு வளர்ச்சி சார்ந்து மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. 2025-க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 
 • அதற்கான உள்கட்டமைப்பு வசதி களை உருவாக்க அடுத்த 5 ஆண்டு களில் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுக்கு ரூ.102 லட்சம் கோடி அளவில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தது. 
 • இந்நிலையில் வரும் பட்ஜெட் டில் அது தொடர்பான திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 • உள்நாட்டு உற்பத்தியை ஊக் குவிக்கும் வகையில் இறக்குமதி களுக்கு வரி விகித்தை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 • மின்னணு, மின்சார சாதனங்கள், கைவினைப் பொருட்கள், வேதிப் பொருட்கள் உள்ளிட்ட 50 பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கும் என்று தெரிகிறது. 
 • நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீத்துக் குள் கட்டுக்குள் வைக்க அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் வரிவருவாய் குறைந்துள்ளதால், அரசு கடும் நிதிப் பற்றாக் குறையை எதிர்கொண்டுள்ளது. 
 • எனவே, வரும் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கை 3.6 சதவீதமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், நிதிப் பற்றாக் குறையை எதிர்கொள்ள, பங்கு விலக்கல் இலக்கை ரூ.1.5 லட்சம் கோடியாக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 • ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற் கும் முடிவை மத்திய அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment