பொதுத்தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


  • பொதுத்தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
  • ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு சைக்கிள்களை வழங்கினார். 
  • பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறம்பட செய்து வருகின்றனர். 
  • அதில் தமிழகத்தில் தற்போது வரை ரூ.3 லட்சத்து 431 கோடி செலவில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 
  • இன்று (அதாவது நேற்று) கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2 ஆயிரத்து 141 சைக்கிள்கள் என மாவட்டம் முழுவதும் 13 ஆயிரத்து 714 சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலையில்லா சைக்கிள்கள் மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால் வழங்கப்பட முடியவில்லை. 
  • தற்போது தீர்ப்பு வந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு சைக்கிள்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 
  • உயர் கல்வித்துறை இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டம் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2019 வரை 4 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 
  • இந்த சட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தற்போது வந்த சட்டமல்ல. வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 
  • மேலும் அமைச்சரிடம் நிருபர்கள் குறுக்கிட்டு, ‘ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது குறித்து என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர். 
  • அதற்கு அமைச்சர், தமிழகத்தில் ‘8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி செயல்படும் வேலை நேரத்தில் 1 மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்’ என்று பதில் அளித்தார்.

No comments:

Post a Comment