நெட் தகுதி தேர்வில் 60 ஆயிரம் பேர் தேர்ச்சி 

நெட் தேர்வில் 60 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித் துள்ளது.

இந்தியாவில் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய வும், இளநிலை ஆராய்ச்சி படிப் புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாய மாகும்.

சிபிஎஸ்இ நடத்திவந்த இந்தத் தேர்வை கடந்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு நெட் தேர்வு கடந்த டிசம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெற் றது. நாடு முழுவதும் 219 நகரங் களில் உள்ள 700-க்கும் மேற் பட்ட மையங்களில் தேர்வு நடத்தப் பட்டது. மொத்தம் 7.93 லட்சம் பட்டதாரிகள் தேர்வெழுதினர்.

இந்நிலையில், நெட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியாகின. இதில் 60,147 பேர் உதவிப் பேராசிரியர் பணிக் கும், 5,092 பேர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் தகுதி பெற்றுள்ளனர். பட்டதாரிகள் தங்கள் தேர்வு முடிவு களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment