மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு 6-ந்தேதி கடைசி நாள்

2020-2021-ம் கல்வி ஆண்டில் மருத்துவ இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு வருகிற மே மாதம் 3-ந்தேதி நடக்கிறது. நீட் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 2-ந்தேதி முதல் பெறப்பட்டன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31-ந்தேதி (நேற்று முன்தினம்) கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இணையதள சேவை முடக்கம் போன்ற காரணங்களால் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான தேதியை தேர்வு முகமை நீட்டித்து இருக்கிறது. அதன்படி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11.50 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப கட்டணத்தை 7-ந்தேதி இரவு 11.30-க்குள் செலுத்திடவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான தேதியில் (15.1.2020 முதல் 31.1.2020) எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment