நாடு முழுவதிலும் 5 லட்சம் காவலர் பணியிடங்கள் காலி மத்திய அரசு தகவல்


 • நாடு முழுவதிலும் 5 லட்சம் காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
 • 2019-ம் ஆண்டு கணக்கீட்டின் படி பணிபுரியும் மொத்த காவலர் கள் எண்ணிக்கையில் 9 சதவீதத் துக்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. 
 • நாடு முழுவதும் காவல் துறைக்கு அனுமதிக்கப்பட்ட போலீஸார் எண்ணிக்கை 25,95,435 ஆகும். ஆயினும் 20,67,270 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 5,28,165 இடங்கள் காலியாக உள்ளன. 
 • மத்திய உள்துறை அமைச்சகத் தின் கீழ் இயங்கும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு (பிபிஆர்& டி)இந்த வரு டாந்திர புள்ளி விவரத்தை திரட்டி யுள்ளது. 
 • இந்த பிரிவின் இயக்குநர் வி.எஸ்.கே.கவுமுதி உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று 2019 ஜனவரி 1-ம் தேதி வரையிலான காவல்துறை அமைப்புகள் தொடர்பான புள்ளிவிவரத்தை வெளியிட்டார். காவல் படை பிரிவில் 1,85,696 பெண்கள் உள்ளனர்.
 • அது மொத்த காவலர் எண்ணிக்கையில் 8.98 சதவீதமாகும். 2018-ல் 1,50,690 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். 
 • மத்திய ஆயுத காவல் படையில் அனுமதிக்கப்பட்ட காவலர் எண் ணிக்கை ஜனவரி 1, 2019-ன்படி 10,98,779 ஆகும். ஆனால் உண்மை யில் பணிபுரிவோர் எண்ணிக்கை 9,99,918 ஆகும். 
 •  ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பணிபுரியும் போலீஸ் விகிதம் 158.22 என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் 632.02 பேருக்கு ஒரு போலீஸ் இருப்பதும் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. 
 • நாடு முழுவதிலும் 777 காவல் மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் அனுமதிக்கப்பட்ட காவல்நிலை யங்கள் எண்ணிக்கை 16,771 ஆகும் ஆனால் இருப்பதோ 16,587 ஆகும்.

1 comment:

 1. Sir ipo vitta Resalt la pathengana Girlku cutof anounse panna mellay vittu iruganga
  plz sir ithugu ethana step eduga sir
  Enna Ennoda Mark 51 varthu sir

  ReplyDelete