5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளியிலேயே தேர்வு மையம் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.


 • 5, 8-ம் வகுப்புகள் பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 
 • 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை செய்து வருகிறது. 
 • இந்த நிலையில் பொதுத்தேர்வு குறித்து சில மாதங்களுக்கு முன்பு கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறையில், ‘5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அருகாமையில் இருக்கும் வேறு பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுத வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
 • இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியது. இதையடுத்து அதில் சில திருத்தங்களை செய்து, மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். 
 • அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- அனைத்து மாவட்டங்களில் மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றி 5-ம் வகுப்பு வரை நடத்தும் அனைத்து பள்ளிகளும், அதேபோல், 5, 8-ம் வகுப்புகள் நடத்தும் எல்லா பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைத்தல் வேண்டும். 
 • 5, 8-ம் வகுப்புகளுக்குரிய பொதுத்தேர்வு வினாத்தாள் கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். 
 • அதனை அவர்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். 
 • தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளும் வினாத்தாள்களை பெற்று தேர்வு நடத்த வேண்டும். 
 • 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிக்க வேண்டும். 
 • அதனடிப்படையில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். 
 • அரசுத்துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் படிக்கும் மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. 
 • தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.100-ம், 8-ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.200-ம் தேர்வு கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். 
 • வினாத்தாள் கட்டுகாப்பு மையத்தில் ஒவ்வொருநாளும் பெறப்படும் பள்ளிவாரியான விடைத்தாள்களை அன்றைய தினமே அந்த வினாத்தாள் கட்டுகாப்பு மையத்துக்குட்பட்ட பிற பள்ளிகளுக்கு மதிப்பீட்டு பணிக்காக மாற்றிக்கொடுத்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற வேண்டும். 
 • மதிப்பீட்டு பணி முடிந்ததும், 5-ம் வகுப்புக்குரிய விடைத்தாள்கள் 28.4.2020-க்குள்ளும், 8-ம் வகுப்புக்குரிய விடைத்தாள்கள் 25.4.2020-க்குள்ளும் வினாத்தாள் கட்டுகாப்பு மையத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும். 
 • பள்ளிவாரியான மதிப்பெண் பட்டியலை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து தலைமை ஆசிரியர்கள் பெற்று வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக பள்ளிகளில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment