5, 8-ம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைச்சர் விளக்கம்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு, அந்தந்த பள்ளிகளில் நடை பெறாமல், வேறு மையங்களில் நடைபெற உள்ளதாக வெளியான தகவல் தவறானது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாமை அமைச்சர் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர் களிடம் கூறியதாவது:

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக் கான பொதுத்தேர்வு, அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல், வேறு மையங்களில் நடைபெற உள்ளதாக தவறான செய்தி பரவி வருகிறது. இது தொடர்பாக எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. ஜல்லிக்கட்டு குறித்து பாடப் புத்தகத்தில் சேர்ப்பதாகக் கூற வில்லை. ஜல்லிக்கட்டு குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள சி.டி. வழங்கப்படும்.

கேந்திரிய வித்யாலயா பள் ளியை தாலுகா அளவில் அமைப்பது குறித்து முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment