அறிவிப்பு வெளியாகி 5 மாதங்களாகியும் 5, 8-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியாகவில்லை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடிப்பு

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இதுவரை மாதிரி வினாத்தாள் வெளியிடப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே குழப்பம் நிலவிவருகிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாண வர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப் படாது என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

அதன்படி 5, 8-ம் வகுப்புக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதேநேரம் பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி 5 மாதங்களாகியும் மாதிரி வினாத் தாள், வினா வடிவம் வெளியிடப் படாததால் மாணவர்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக்கல்வி முறை அமலில் உள்ளது. ஒவ்வொரு பரு வத்துக்கும் தனித்தனியே புத்தகங் கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு முப்பருவ பாடத்திட்ட அடிப்படையில் நடை பெற உள்ளது. இதனால் 3 பருவத் துக்குரிய புத்தகங்களையும் சேர்த்து படிக்க வேண்டும். இதுவே குழந்தைகளுக்கு பெரும் பாரமாகிவிட்டது.

முதல்முறையாக பொதுத்தேர்வு எழுதவுள்ளதால் மாணவர்கள் இடையே அச்சமும் நிலவுகிறது.

மறுபுறம் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் குறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. பழைய முப்பருவத்தேர்வில் வினாத்தாள்கள் மாவட்டவாரியாக தயாரித்து வழங்கப்பட்டன.

தற்போது பொதுத்தேர்வு வினாத்தாளை தேர்வுத் துறை வடிவமைத்து வழங்கும் என்பதால் எதை முன்மாதிரியாக வைத்து மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது என்ற குழப்பம் நீடிக் கிறது.

பொதுத்தேர்வுக்கு முன்மாதிரி யாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்ட 2-ம் பருவத்தேர்வும், வழக்க மானதாக இருந்துவிட்டது. இன் னும் 2 மாதமே அவகாசமுள்ள தால், இளம் குழந்தைகளை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்துவது சிரம மாகும்.

வினாத்தாள் கட்டமைப்பு தெரிந்தால் மட்டுமே அதற்கேற்ப மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த முடியும். அதனால் மாதிரி வினாத்தாளை அரசு உடனே வெளியிட வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும் போது, ‘‘5, 8-ம் வகுப்புகளுக்கு அமலாகியுள்ள புதிய பாடத்திட்டம் கடினமாக உள்ளதால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதில் பொதுத்தேர்வு அறிவிப்பு கூடுதல் சுமையாகிவிட்டது. அரசு தாமதமாக அறிவித்தால் பெரும் பாலான மாணவர்களிடம் முதல் பருவ பாடப்புத்தகங்கள் இல்லை. இதனால் புத்தகங்களை நகல் எடுத்து மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது.

மேலும், 5-ம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு குறித்த விளக்கமும் தெளிவாக இல்லை. இதுதவிர பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவம் தெரியாததால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் தடுமாற வேண்டியுள்ளது. எனவே, கல்வித் துறை மாதிரி வினாத்தாளை உடனே வெளியிடுவதுடன், இந்த ஆண்டு மட்டும் பொதுத்தேர்வில் முதல்பருவ பாடங்களைத் தவிர்க் கலாம்’’ என்றார்.

இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நடப்பு கல்வி ஆண்டில் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை 17 லட்சம் பேர் வரை எழுதவுள்ளனர். தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் தயாரிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. பணிகளை முடித்து விரை வில் மாதிரி வினாத்தாள் வெளி யிடப்படும்’’ என்றனர்.

No comments:

Post a Comment