இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க அமேசான் திட்டம் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் தகவல்

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க அமே சான் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக அதன் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, சில்லறை வணிகம், லாஜிஸ்டிக்ஸ், உற்பத்தி, உள்ள டக்க உருவாக்கம் என வெவ்வேறு துறைகளில் நாடுமுழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்தியா வந்த அவர், இந்திய சிறு, குறு நிறு வனங்கள் பயன்பெறும் வகையில் அமேசான் நிறுவனம் 1 பில்லியன் டாலர் (ரூ.7,000 கோடி) இந்தியா வில் முதலீடு செய்யும் என்று அறிவித்தார்.

அமேசானின் இந்த முதலீட்டால் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்த கர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும்; இந்தியாவின் ஏற்றுமதியும் உயரும் என்று அப்போது அவர் குறிப்பிட்டார். 2025-க்குள் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய தயாரிப்புகளை அமேசான் நிறுவனம் ஏற்றுமதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ‘அமேசான் போன்ற நிறுவனங்களின் முதலீட் டால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இல்லை. தன்னிச்சையான விலை நிர்ணயத்தால் அவை நஷ் டத்தைத்தான் ஏற்படுத்துகின்றன’ என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் எதிர்வினை ஆற்றினார்.

அந்நிய வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் சலுகை வழங்கு வதால் இந்திய சிறு வணிகர் கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் அந்நிய வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகம் தொடர்பான இந்திய விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று பியுஷ் கோயல் கூறினார்.

அதைத் தொடர்ந்தே அமேசான் நிறுவனம், வேலைவாய்ப்பு உரு வாக்கம் தொடர்பான இந்தப் புதிய அறிவிப்பை நேற்று வெளியிட் டுள்ளது.

15,000 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் 9 ஏக்கர் பரப்பளவில் அமேசான் நிறுவனம் ஹைதராபாத் தில் அலுவலகம் ஒன்றை சமீபத்தில் திறந்தது. அமெரிக்காவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள அந்நிறு வனத்தின் முதல் சொந்தக் கட்டிடம் இதுவே.

No comments:

Post a Comment