தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தவிர்த்து குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தி பணி ஆணை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்


  • குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
  • குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுவரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் 99 பேர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
  • பின்னர் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. 
  • இந்நிலையில், முறைகேடு காரணமாக குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. இதனால், நியாயமான முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கத்தில் இருந்தனர். இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ‘‘ஒருசிலர் செய்த தவறுக்காக நேர்மையாக தேர்வு எழுதிய மற்றவர்களை தண்டிப்பது சரியல்ல. அதனால், குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது’’ என தெரிவித்திருந்தார். 
  • இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், “குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர் களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
  • ஒட்டுமொத்த தேர்வும் ரத்து கிடையாது. குரூப்-4 தேர்வின் அடுத்தகட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 9,300 காலிப் பணியிடங்கள் தற்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு முறையாக ஒதுக்கப்படும். இதனால், தேர்வு எழுதியவர்கள் கவலைப்பட வேண்டாம்’’ என தெரிவித்துள்ளனர். 
  • டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை கேடு விவகாரம், அந்த ஆணை யத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிட்டது. 
  • இதனால், தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள், தேர்வுக் குழுவினர் உட்பட அனைவரும் இடமாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment