குரூப் 4 தேர்வு முறைகேடு சர்ச்சை தேர்வர்களிடம் தீவிர விசாரணை

குரூப் 4 தேர்வில் முறைகேடில் ஈடுபட்டதாக கருதப்படும் 35 தேர்வர்களிடம் 6 மணி நேரத் துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

தமிழக அரசுத் துறைகளில் குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஒ), தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 9,398 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த செப்.1-ம் தேதி நடை பெற்றது.

இந்த தேர்வை தமிழகம் முழு வதும் 16 லட்சம் பேர் எழுதினர். இதில் 12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் ராம நாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ் வரம், கீழக்கரை ஆகிய 2 மையங்களில் தேர்வெழுதிய 40 பேர் மாநில அளவில் முதல் 100 இடங்களைப் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து முறைகேடு நடைபெற்றதாக கருதப்படும் 2 மையங்களில் தேர்வு எழுதிய வர்களிடம் புகார் குறித்து விசாரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்தது. இதுதொடர்பான விசாரணைக்காக சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டிருந்தது.

முதல்கட்டமாக ராமநாதபுரத் தில் தேர்வெழுதிய வெளிமாவட்ட தேர்வர்கள் 35 பேர் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று விசார ணைக்கு ஆஜராகினர். அவர்களி டம் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன், செயலர் நந்தகுமார் அடங் கிய நிர்வாகக்குழு 6 மணி நேரம் வரை விசாரணை நடத்தியது.

அப்போது தேர்வர்களிடம் சான்றிதழ்கள், விடைத்தாள்கள், தேர்வுக்கு தயாரான விதம், பயிற்சி பெற்ற மையத்தின் விவரம், தேர்வு மையமாக ராமநாதபுரத்தை தேர்வு செய்தது ஏன் என்பன உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், பொது அறிவு வினாக்கள், கணக்குகள் தொடர்பான குறுந்தேர்வு நடத் தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இன்றும் (ஜனவரி 14) தேர்வர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது.

இந்த விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே அதுதொடர்பான முழு விவர அறிக்கை வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment