தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் இல்லை தொடக்கக்கல்வித் துறை அறிவிப்பு


  • தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் படிப்பவர்கள் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 
  • இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங் களை அமைக்க வேண்டும். பொதுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுத் துறையால் மிகுந்த பாதுகாப்பான முறையில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். 
  • அதை அவர்கள் நோடல் மையங்களுக்கு அனுப்ப வேண்டும். அங்கிருந்து பள்ளி தலைமையாசிரியர்கள் தினமும் வினாத் தாள்களை பெற்று தேர்வை நடத்த வேண்டும். 
  • அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி களில் 25 சதவீதம் இடஒதுக்கீடில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 
  • தனியார் பள்ளிகளில் படிக்கும் இதர மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக 5-ம் வகுப்புக்கு ரூ.100-ம், 8-ம் வகுப்புக்கு ரூ.200-ம் செலுத்த வேண்டும். 
  • மேலும், நோடல் மைய பொறுப்பாளர், விடைத்தாள்களை மதிப்பீட்டு பணிக்காக பிற பள்ளிகளுக்கு பிரித்து அனுப்ப வேண்டும். அதன்பின்னர் மதிப்பீட்டு பணிகளை முடித்து விடைத்தாள்களை, சம்பந்தபட்ட தலைமையாசிரியர் களிடம் ஒப்படைக்க வேண்டும். 
  • தலைமையாசிரியர்கள் வகுப்பு வாரியாக மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தயாரித்து பள்ளிகளில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment