சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு 13-ந்தேதிக்கு மாற்றம்-சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு

2019-ம் ஆண்டுக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத்தேர்வு தமிழகத்தில் உள்ள 32 மையங்களில் இந்த மாதம் 11-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த தேர்வு 13-ந்தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அன்றைய தினம் அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற விண்ணப்பதாரர்களுக்கு, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ள தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத இருந்தவர்கள், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்-நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதலாம்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment