113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நேர்முகத் தேர்வுக்கான 32 பேர் கொண்ட டிஎன்பிஎஸ்சி பட்டியல் ரத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு .


 • தமிழகத்தில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிகளுக்கு 32 பேருக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுத்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 • இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு எழுதிய செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமானோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: 
 • தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங் களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி கடந்த 2018 பிப்ரவரி மாதம் அறிவிப் பாணை வெளியிட்டது. மொத்தம் 2,176 பேர் இத்தேர்வுக்கு விண் ணப்பித்திருந்தனர். 
 • இதில், 785 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டன. மீதமுள்ளவர் களுக்கு கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு பதவிக்கு 2 பேர் வீதம் அழைக்கப்பட வேண்டும். ஆனால் மொத்தம் உள்ள 113 காலி யிடங்களுக்கு 32 பேருக்கு மட்டும் டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 
 • மேலும், அங்கீகரிக்கப்பட்ட பணிமனையில் அனுபவச்சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் போதிய வருகைப் பதிவேடு இருக்க வேண்டும் என்றும் பல் வேறு காரணங்களைக் கூறி டிஎன்பி எஸ்சி நிர்வாகம் எங்களை நிராக ரித்துள்ளது. 
 • இது சட்டவிரோதம். எனவே, நேர்முகத் தேர்வுக்கு 32 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்து டிஎன்பிஎஸ்சி வெளியிட் டுள்ள பட்டியலை ரத்து செய்து, தகுதியானவர்களுக்கு புதிதாக சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண் டும். இவ்வாறு அதில் கோரி யிருந்தனர். 
 • இந்த வழக்கு விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. 
 • அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சிறப்பு அரசு ப்ளீடர் போத்திராஜ், டிஎன்பிஎஸ்சி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன், வழக்கறிஞர் நிறைமதி மற்றும் மனுதாரர்கள் தரப்பில் நளினி சிதம்பரம், கருணாகரன் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். 
 • அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப் பித்த உத்தரவு: மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்து எழுத் துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,328 பேரின் பணிமனை அனுபவச் சான்றிதழை மோட்டார் வாகன பராமரிப்புத் துறை ஆய்வு செய்ய வேண்டும். 
 • இந்த பணிமனை அரசு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். இதுதொடர்பான ஆய்வின் போது சந்தேகம் எழுந்தால் அதுகுறித்து விண்ணப்பதாரர் களிடம் விளக்கம் பெறலாம். 
 • இந்த நடைமுறைகள் 4 வாரங்களுக்குள் வெளிப்படையாகவும் நேர்மையாக வும் நடத்த வேண்டும். அதன்பிறகு டிஎன்பிஎஸ்சி, தகுதியானவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து அடுத்த 4 வாரங்களுக்குள் புதிய பட்டியலை வெளியிட வேண்டும். 
 • எனவே 32 பேரை மட்டும் நேர் முகத் தேர்வுக்கு அழைப்பு விடுத்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு தானாகவே ரத்தாகி விடும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment