ஜன.10-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்...

சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (முழு கூடுதல் பொறுப்பு) இயக்குநர் வே.விஷ்ணு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையை வேலை வாய்ப்பு வெள்ளி - ஆக கடைப்பிடிக்கப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை (ஜன.10) த யார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளனர். கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகவளாகத்தில், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 35-வயதுக்கு உள்பட்ட 8-ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐ.டி.ஐ.,டிப்ளமோ , கலை, அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில், 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், முழுமையான காலிப்பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்துக்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment