10-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்.21-ல் தொடங்குகிறது


  • பத்தாம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வு பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளி கல்வியின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 
  • இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வை பிப்ரவரி 21 முதல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதில் தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் கள் பிப்.25-ம் தேதி தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்படும். 
  • அதன் பின் தனித்தேர்வர்களுக்கு பிப். 26 முதல் 28-ம் தேதிக்குள் செய் முறை தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிந்தபின் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை மார்ச் 5-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
  • மேலும், எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் உரிய வழிகாட்டுதல் களை பின்பற்றி செய்முறை தேர்வை நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment