அம்பேத்கர் கல்வி மையம் சார்பில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி சென்னையில் பிப். 2-ல் தொடங்குகிறது.


  • அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் குரூப் 1, குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் பிப்ரவரி 2-ல் தொடங்குகிறது. 
  • இதுகுறித்து அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ந.வாசுதேவன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குருப் 1, குருப் 2 தேர்வுகளுக்கு எங்கள் மையம் சார்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
  • இந்த பயிற்சியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்புமுன்னனி ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறோம். தொழில்நுட்பரீதியாகவும், மாணவர் திறனை வெளிக்கொணரும் விதமாகவும் கலந்துரையாடல் வடிவத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள். 
  • இங்கு படித்த 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிகின்றனர். இந்த பயிற்சியில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட அனைத்துப்பிரிவு மாணவர்களும் பங்கேற்கலாம். 
  • சென்னை பாரிமுனையில்உள்ள சிஐடியு அலுவலகத்தில்வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும். அதன்படி பயிற்சி வகுப்புகள் பிப்.2-ம் தேதி தொடங்குகிறது. 
  • இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை பாலாஜி - 90432 29495, செளந்தர்- 90950 06640, வாசுதேவன்-94446 41712ஆகிய எண்களில் தொடர்புகொண்டு அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment