மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து விவகாரம் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அரசு முடிவு  சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு குழு அமைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய 5 அமைச் சர்கள் அடங்கிய குழு அமைக் கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலக அள வில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ (இன்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் எமினென்ஸ்) என்ற திட் டத்தை மத்திய அரசு 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி 10 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி அளிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தேர் வானது. அதேநேரம் இடஒதுக்கீடு உட்பட சில காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக கடந்த நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவா திக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி அளிக்கும் பட்சத்தில் சிறப்பு அந்தஸ்துக்கு அனுமதி அளிக்க முடிவானது. இதுகுறித்து தமிழக உயர்கல் வித் துறை சார்பில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத் துக்கு கடிதம் எழுதப்பட்டது. இதை யடுத்து அண்ணா பல்கலைக்கழகத் துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் படுவதால் மாநில அரசு பின்பற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடரும் என்று மத்திய அரசு உறுதியளித்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் அண்ணா பல் கலை.க்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஏதுவாக கல்வி நிறுவ னத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:

கடந்த நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத் தில் அண்ணா பல்கலைக்கழகத் தின் சட்டம் 1978 மற்றும் புதுசட்டம் திருத்தம் ஆகியவற்றின் அடிப் படையில் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவெடுக்கப் பட்டது. அதன்படி அண்ணா உயர் சிறப்பு கல்வி நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்று இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய சிறப்புக்குழு அமைக் கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர நிதித்துறை, சட்டத்துறை, உயர்கல்வித் துறை செயலர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “இந்த குழு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் இரண் டாகப் பிரிக்கப்பட உள்ளது. அதில் தற்போதைய அண்ணா பல்கலை. வளாகத்தில் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, எம்ஐடி கல்லூரி ஆகியவை ஒருங்கிணைந்த கல்வி நிறுவனம் மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகமாக செயல் படும். இதற்கு மாநில அரசு 25 சத வீதமும், மத்திய அரசு 75 சதவீத மும் நிதி பங்களிப்பு செய்யும்.

பிரத்யேகமாக உருவாக்க திட்டமிட்டுள்ள பல்கலைக்கழகம், ஆய்வு கல்வி நிறுவனமாக செயல்படும். இது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். அதில் பொறியியல் துறை சார்ந்த பல் வேறு சான்றிதழ் மற்றும் ஆய்வு படிப்புகள் வழங்கப்படும். அதில் இந்திய மாணவர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். அரசு, அரசு உதவி மற்றும் தனி யார் பொறியியல் கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் வரும்” என்றனர்.

No comments:

Post a Comment