சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற  மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதா லட்சுமி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தசைச்சிதைவு நோய் அல்லது முதுகு தண்டுவட பாதிப்பால் 2 கால்களும், 2 கைகளும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் மூலம் தேர்வு செய்து பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

60 வயதுக்கு உட்பட்ட ஆண் மாற்றுத் திறனாளிகளுக்கும், 55 வயதுக்கு உட் பட்ட பெண் மாற்றுத் திறனாளிகளுக்கும் தேவையின் அடிப்படையில் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.

இந்த சிறப்பு சக்கர நாற்காலி ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப் படும். எனவே, தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக் கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கூடிய விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அரசு புறநகர் மருத்துவமனை வளாகம், கே.கே.நகர், சென்னை-78 என்ற முகவரி யில் நேரிலோ அல்லது தபால் மூல மாகவோ விண்ணப்பித்து பயன்பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment