மொழி பெயர்ப்பாளர் பணிக்கு நேர்காணல் கட்டாயமாக்கப்பட வேண்டும் பழைய நடைமுறையை பின்பற்ற தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல் 

தமிழ் வளர்ச்சித்துறையில் மொழி பெயர்ப்பாளர் பணிக்கு தகுதியான வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முன்வர வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

தமிழக அரசுப்பதவிகளில் உள்ள பல்வேறு பணியிடங்கள் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணை யம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேரவுகள் மூலம் நிரப்பப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து பல்வேறு சீர்திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வரு கிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 2 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முறைகள் மாற்றப்பட்டன.

இதற்கிடையே தமிழ் வளர்ச்சித் துறையின் மொழிபெயர்ப்பு பிரிவில் உதவிப்பிரிவு அதிகாரி பணியில் உள்ள 5 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டது.

அதில் உதவிப்பிரிவு அதிகாரி பணிக்கு 2 தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடைபெறும். நேர்காணல் தேர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. குரூப் 2 பதவிக்கு இணையான உதவிப் பிரிவு அதிகாரி பணிக்கு நேர்காணல் இல்லாத தேர்வு முறையால் தகுதியற்ற வர்கள் பணிவாய்ப்பு பெறும் சூழல்கள் இருப்பதாக குற்றச்சாட்டு கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தமிழ் ஆர்வலர் கள் கூறியதாவது: தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப்பிரிவு அதிகாரி பணியிடங்கள் இதுவரை நேர் காணல் தேர்வு மூலமே நிரப்பப் பட்டன. பழைய நடைமுறையில் 300 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பொது அறிவு கேள்விகள் இடம்பெறாது. மேலும் நேர்காணலுக்கு 40 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், புதிய நடைமுறையில் எழுத்துத்தேர்வு மட்டுமே நடை பெற உள்ளது. முதல்தாள் 300 மதிப்பெண்ணுக்கும், 2-ம்தாள் 200 மதிப்பெண்ணுக்கும் நடத்தப்படும்.

முதல்தாளில் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் மொழி பெயர்ப்பு, விரிவாக எழுதுதல் வடிவில் வினாத்தாள் இருக்கும். 2-ம்தாளில் பொது அறிவு, கணிதம் மற்றும் மனத்திறன் சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இந்த 2 தாள்களும் சேர்த்து மொத்தமுள்ள 500 மதிப்பெண்ணில் குறைந்தபட்ச தேர்ச்சியாக பொதுப் பிரிவுக்கு 200-ம், இதரபிரிவுக்கு 150-ம் நிர்ண யிக் கப்பட்டுள்ளன. நேர்காணல் இல்லாத தேர்வு முறையால் முழுவதும் மனப்பாடம் மட்டும் செய்து பட்டதாரிகள் எளிதில் பணி வாய்ப்பு பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய திறமையற்ற போட்டித்தேர்வு முறைக்கு தமிழ்வளர்ச்சித்துறை அனுமதி தந்திருக்கக் கூடாது.

அரசு ஆவணங்கள் தொடர்பான மொழி பெயர்ப்பு பணியில் உதவிப்பிரிவு அதிகாரியே முக்கிய பங்காற்றுவார். முக்கியத்துவம் பெற்ற இப்பணியில் தகுதியானவர் களை நியமிக்க வேண்டியது அவசியம். இதுதவிர உதவிப்பிரிவு அதிகாரி பதவி குரூப் 2 பணிக்கு நிகரானது. மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.

குரூப் 2ஏ பணியிடங்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வரையே ஊதியம் அளிக்கப்படுகிறது. அதற்கே நேர்காணல் நடத்தப்படுகி றது. எனவே, இத்தகைய பதவி நிலையை நிரப்பும்போது நேர் காணல் தேர்வை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தக்குமார் கூறும் போது, ‘‘தேர்வு முறை வடிவங்க ளில் மாற்றம் செய்ய தேர்வாணை யத்துக்கு அதிகாரமுள்ளது. அதன் படி மொழி பெயர்ப்பு துறையில் உதவிப்பிரிவு அதிகாரி பணியிடங் களை நேர்காணல் இல்லாமல் எழுத்துத்தேர்வு மூலம் மட்டுமே நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் குரூப் 2 பதவிகளுக்கு இணையானது என்றபோதும் நேர்காணல் தேவைப் படாது’’ என்றார்.

No comments:

Post a Comment