தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடக்கிறது

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்கு நர் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு அன்றைய தினம் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 27-ம் தேதி (இன்று) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த முகாம் கிண்டியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் (கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள் வரை (மாற்றுத்திறனாளிகள் உள்பட) இந்த முகாமில், கலந்து கொள்ளலாம். வயது 35-க்குள் இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளன.

படித்த, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment