கிராமப்புற அறிவியல் கண்டுபிடிப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசின் அறிவியல் நகரம் அறிவிப்பு

அறிவியல் நகரம் துணைத் தலைவர் உ.சகாயம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிராமப்புற மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொண்டு வரும் வகையிலும் அவர் களை கவுரவிக்கும் விதத்திலும் இரு சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு, ஒவ் வொரு ஆண்டும் தலா ரூ.1 லட் சம் வீதம் பரிசுத் தொகையை சென்னை, அறிவியல் நகரத்தின் மூலமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஊரகப் பகுதி யைச் சேர்ந்தவராக இருப்பதோடு அவர்கள் மரபு வழியான தொழில் நுட்ப அறிவாற்றலோடும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். ஊரகம் என்பது ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளைக் குறிக்கும். இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குப் பொருந்தாது.

விண்ணப்பதாரரின் கண்டு பிடிப்புக்கான ஆவணங்கள், சான்றி தழ்கள், புகைப்படங்கள், வரிசை விளக்க வரைபடம், சோதனை அறிக்கைகள் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த இதர ஆவணங்களுடன் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட அசல் விண்ணப் பப் படிவத்தை அறிவியல் நகரத் துக்கு அனுப்ப வேண்டும்.

மாதிரி விண்ணப்பப் படி வத்தை அறிவியல் நகரத்தின் இணையதளத்தில் (www.sciencecitychennai.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் தங்கள் கண்டு பிடிப்பு வேறு நிறுவனத்தால் அங் கீகரிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அதற்காக விருது பெற்றிருந்தாலோ அத்தகவலையும் விண்ணப் பத்தில் குறிப்பிட வேண்டும். விண் ணப்பதாரரின் கண்டுபிடிப்புகள் பற்றி பத்திரிக்கைகளில் வெளி யிடப்பட்ட விபரங்கள், செய்தித் தாள் வெளியீடுகள், காப்புரிமை (ஏதாவது இருப்பின்) மற்றும் கண்டுபிடிப்புக்கு ஆதரவு தெரி விக்கும் விதமாக இதர தகவல்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.

தேவைப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரரின் கண்டுபிடிப்பு, செயல்படும் மாதிரி (working models) குறித்து அறிவியல் நகரத்துக்கு குறிப்பு அனுப்ப வேண்டும்.

நிறுவனங்களில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள், அந்நிறுவனத் தின் தலைவரால் வழங்கப்பட்ட ‘தடையின்மைச் சான்றிதழ்’ உடன் விண்ணப்பிக்க வேண்டும்.

குழுவாக செயல்பட்டு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி இருந்தால், குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் ஒப்புதல் பெற்று அதை அசல் விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும்.

மேற்கண்ட ஆவணங்கள் அடங்கிய விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் சென்னை கிண்டியில் உள்ள அறிவியல் நகரம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment