தமிழக செய்தித்துறை இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு

தமிழக கவர்னர் மாளிகையின் இணை இயக்குனர் நிலையில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வரும் சிவ.சு.சரவணன் கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று கவர்னரின் மக்கள் தொடர்பு அலுவலராக கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.முத்தையா இணை இயக்குனர் பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (டெல்லி) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக்கழக இணை இயக்குனர் அம்பலவாணன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தில் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment