வட்டாரக்கல்வி அதிகாரி பணிக்கான தேர்வு  ஜன.9-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்ட அறி விப்பு: பள்ளிக்கல்வித் துறை யில் காலியாக உள்ள 96 வட்டாரக்கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பாணை கடந்த நவம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.

தொடர்ந்து விண்ணப்பப் பதிவு டிசம்பர் 19-ம் தேதி இரவு தொடங்கியது. இந்த பணிக்கு தகுதியான பட்டதாரிகள் www.trb.tn.nic.in இணையதளம் வழியாக ஜனவரி 9-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தற்போதுள்ள புதிய நடைமுறைகளின்படி விண் ணப்பிக்கும் போதே, உரிய சான்றிதழ்களையும் சேர்த்து பதிவேற்றம் செய்ய வேண் டும். தேர்வு அட்டவணை இறுதிநிலையில் இருப்பதால் எந்த காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. எனவே, பட்டதாரிகள் உரிய காலத்தில் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment