5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் விவரங்களை தயாராக வைத்திருக்க உத்தரவு

தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் குறுவள மையங்களாக செயல் படும் பள்ளிகள் தங்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை பாடம் மற்றும் பயிற்று மொழி வாரியாக தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இந்த பட்டியலை 5, 8-ம் வகுப்புகளுக்கு தனிதனியாக தயாரிக்க வேண்டும். தேர்வுத் துறையின் மூலம் உரிய அறிவிப்பு வழங்கப்படும்போது இந்த விவ ரங்களை எமிஸ் இணையதளத் தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment