மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு ஜனவரி 5-ம் தேதி நீட் தேர்வு 1.5 லட்சம் டாக்டர்கள் எழுதுகின்றனர் 

மருத்துவப் பட்டமேற்படிப்பு களுக்கு ஜனவரி 5-ம் தேதி நடக் கும் நீட் தேர்வை நாடுமுழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற் பட்ட டாக்டர்கள் எழுதுகின்றனர்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத் துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தகுதிப்பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.

தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு www.nbe.edu.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி யுடன் நிறைவடைந்தது.

நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு பணியாற்றிவரும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக் டர்கள் மருத்துவ பட்டமேற்படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.

தமிழகத்தில் இருந்து மட்டும் அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தனர்.

இந்நிலையில் நீட் தேர்வு, ஜனவரி 5-ம் தேதி தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடுமுழுவதும் 162 நகரங்களில் நடைபெறுகிறது. தேர்வு முடிவு ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.162 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஜனவரி 31-ம் தேதி முடிவு வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment