பிஎச்டி படிப்புக்கு ஜனவரி 4 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

பிஎச்டி படிப்புக்கு ஜனவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) டி.தியாக ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதி யுடன் முழுநேர மற்றும் பகுதி நேர ஆய்வுப் படிப்புகள் (பிஎச்டி) வழங்கப்படுகின்றன. ஜனவரி பருவ சேர்க்கைக்கு மேலாண்மை யியல், கல்வியியல், முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி யியல், பொருளாதாரம், தொடர் கல்வி, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், தமிழ், மின்னணு ஊடகவியல், வரலாறு, புவியியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், குற்றவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல்கலைக்கழக மானியக்குழு வின் (யுஜிசி) ஜெஆர்எப் தகுதி பெற்ற மாணவர்கள் நிதியுதவி யுடன் ஆய்வு மேற்கொள்ளலாம். தகுதியுள்ள முழுநேர மாணவர் களுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் மாதம் தோறும் ரூ.5,000 ஆராய்ச்சி உதவித் தொகை (ரிசர்ச் பெலோஷிப்) வழங்கப்படும். விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை பல் கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnou.ac.in) பதி விறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 4-ம் தேதி ஆகும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment