அரையாண்டு விடுமுறை ஒருநாள் நீட்டிப்பு ஜன.3-ம் தேதி பள்ளிகள் திறப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

தமிழக அரசின்கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளி களுக்கும் நேற்று (23-ம் தேதி) அரையாண்டுத் தேர்வு முடிந்தது. ‘தேர்வுகள் முடிந்ததும், டிசம்பர் 24-ம் தேதி (இன்று) முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடு முறை. ஜனவரி 2-ம் தேதி பள்ளி கள் மீண்டும் திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்க உள்ள தால், அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில்,

“2019-20-ம் கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வு 23-ம் தேதியோடு முடிவடைந் துள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்த பிறகு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 3-ம் தேதி திறக்கப்படும்” என்று கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment