ஜனவரி 16 பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படவில்லை கல்வித் துறை மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பொதுத்தேர்வு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கலந்துரை யாடல் நிகழ்ச்சிக்காக ஜனவரி 16-ம் தேதி பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தேர்வு பயம், மன அழுத்தம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். அதன் படி 3-வது ஆண்டாக கலந்துரை யாடல் நிகழ்ச்சி டெல்லியில் ஜனவரி 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழு வதும் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கட் டுரை போட்டி நடத்தப்பட்டு வரு கிறது. இதில் வெற்றி பெறு பவர்கள் கலந்துரையாடலில் பங் கேற்கலாம்.

அதன்படி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் 5,200 மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். அதில் 66 பேர் மட்டுமே கலந்துரையாடலில் பங்கேற்க தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி யுடியூப் சேனல், முகநூல் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

கல்வித் துறை சுற்றறிக்கை

இதையடுத்து, இந்த நிகழ்ச் சியை மாணவர்கள் காணும் வகையில் பள்ளிகளில் தேவை யான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை யாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை நேற்று முன்தினம் சுற்ற றிக்கை அனுப்பியது.

அதேநேரம் தமிழகத்தில் ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன் னிட்டு விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது. அன்றைய தினம் பள் ளிக்கு வரவேண்டுமா என ஆசிரியர் கள், மாணவர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்பட வில்லை. வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிகளில் காணவே ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அனைத்து மாண வர்களும் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. ஜனவரி 16-ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் மாணவர்கள் பார்க்கலாம். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் ட்விட்டர் பதிவில், ‘‘மாட்டுப் பொங்கல் விடுமுறையின்போது மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். விடுமுறை ரத்து என்பது தவறான தகவல். பொங்கல் விடு முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment