பள்ளி மாணவியரை 100 சதவீதம் செல்வமகள் திட்டத்தில் சேர்க்க புதிய திட்டம்

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 100 சதவீதம் பள்ளி மாணவிகளை சேர்ப்பதற்காக, ‘பெண் சக்தி' என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது

இந்திய அஞ்சல் துறை சுகன்யா சம்ரிதி எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். அஞ்சலகங்களில் ரூ.250 செலுத்தி பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலர்களோ கணக்கு தொடங்கலாம். தமிழகத்தில் இதுவரை 8 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இத்திட்டத்தில் பள்ளி மாணவியரை 100 சதவீதம் சேர்க்கும் முயற்சியில் அஞ்சல்துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறும்போது, “வரும் ஜன.21-ம் தேதியோடு இத்திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறை வடைகிறது. இதை முன்னிட்டு, ‘பெண் சக்தி' எனும் விழிப் புணர்வு நிகழ்ச்சியை பள்ளிகளில் நடத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பள்ளி மாணவிகளை 100 சதவீதம் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment