பல்கலை. கல்லூரிகளுக்கு  இன்றுமுதல் ஜன.1 வரை தொடர் விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.21) முதல் ஜனவரி 1-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்ப கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர் களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் உள் ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பதிவு செய்யவும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடவும் டிச.21 (இன்று) முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

விடுமுறை முடிந்து மீண்டும் பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்பட வேண் டும். கூடுதலாக விடுமுறை அளிக்கப் பட்டுள்ள 23, 24, 26 மற்றும் 31-ம் தேதிகளுக்கு பதிலாக அடுத்துவரும் விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடத்தி ஈடுசெய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. அறிவிப்பு

இதையடுத்து இன்று முதல் டிச.31-ம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து பருவத் தேர்வு களும் தள்ளிவைக்கப்படுவதாகவும், அந்தத் தேர்வுகள் ஜனவரி 2 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதேபோல், இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களிலும் ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment