தமிழக அரசின் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் தொண்டாற்றி வருகின்றனர். அவர்களின் தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2020-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர், தங்களைப்பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். ‘www.tn.gov.in/ta/forms/deptname/1’ என்ற இணையதளத்தில் இருந்து இவ்விருதுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment